காத்தான்குடி கரையோரங்களில் இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கியுள்ளன!

– பழுளுல்லாஹ் பர்ஹான்

YKKY6மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் கடலை அண்டிய கரையோரங்களில் மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றன.

குறிப்பாக மட்டக்களப்பு புதிய காத்தான்குடி ஏத்துக்கால் பாலமுனை உள்ளிட்ட பகுதிகளில் சிறிய மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக அங்குள்ள மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த காலநிலை தொடரும் பட்சத்தில் மீன்கள் அதிகமாக இறந்த நிலையில் கரையொதுங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு அண்மையில் கிழக்கு மாகாணத்திலுள்ள கடலில் இறந்த நிலையிலும் உயிரோடும் சிறிய, பெறிய மீன்கள்  கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment