– பழுலுல்லாஹ் பர்ஹான்
(அ.ம.ச. அறிக்கையின் ஆங்கிலப் பிரதி இணைப்பு)
அரச மருத்துவர்கள் சங்க மட்டக்களப்பு கிளைத்; தொழிற்சங்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 2013-01-29ம் திகதி பொது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளது.
முற்பகல் 11.00மணியிலிருந்து 2.00மணிவரை நடைபெறவுள்ள குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்வாயிலிருந்து பல கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெறவுள்ளதாக அரச மருத்துவர்கள் சங்க மட்டக்களப்பு கிளைத்; தொழிற்சங்கத்தின் செயலாளர் வி.பி.ராஜநாதன் தெரிவித்தார்.
அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளாவன,
1. மூடப்பட்டுள்ள நோயாளர் பராமரிப்பு சேவைப் பிரிவுகளை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
2. வைத்தியர்களுக்கான விடுதி வசதி.
3. விஸேட பராமரிப்புச் சேவைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மருத்துவக்கல்வி மாணவர்களின் வசதி கருதி மேம்படுத்தல்.
4. தற்போதுள்ள கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் .
5. சேவைகளின் தேவைக்கேற்ப வளங்களை மனித வளம் உட்பட ஒதுக்கும் முறைமையை ஒழுங்குபடுத்தல்.
மேற்சொன்ன தேவைகளை முன்வைத்து சுகாதார அமைச்சிடம் நீண்ட காலம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கிழக்கு மாகாணத்தின் 2இரண்டு மில்லியன் மக்களுக்கு சேவை செய்கின்ற வைத்தியசாலையாகும். இவ்வாறாக அது ஒரு மாகாணப் போதனா வைத்தியசாலை என்ற நிலையில் கூட அது தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதுடன் அதன் அபிவிருத்தி செயற்பாடுகள் சதி முயற்ச்சிகளுடாக கை கூட முடியாமல் ஆக்கப்பட்டன.
மருத்துவ தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் பாவிக்கமுடியாத நிலையில் உள்ளதுடன் 04 மாத காலமாக மூடப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் அதனை புனர்நிர்மாணிக்கவோ,மீள திறப்பதற்கோ, நடவடிக்கை எதுவும் தற்போதுள்ள டெங்கு பரவும் அபாயகரமான சூழலில் கூட எடுக்கப்படவில்லை.
கடந்த வருடம் பிரதான சத்திர சிகிச்சைப்பிரிவு அறை ஏ.ஸி. பழுதடைந்த மத்தியில் பாவனைக்கு பொருத்தமின்மை போன்ற காரணங்களால் பல தடவைகள் மூடப்பட்டன இவற்றிக்கான தீர்வினை சுகாதார அமைச்சு வழங்கவில்லை மத்திய ஏ.ஸி.யானது இரண்டு,மூன்று வாரங்களாக செயலிழந்து காணப்பட்டது. தற்போது இங்கு எந்தவித சத்திரசிகிச்சைகளையும் மேற்கொள்ள முடியாதுள்ளது.இதற்குப் பிரதான காரணம் கூடுதலான தொற்றுத்தன்மை வீதம் மற்றும் சத்திர சிகிச்சைக் குழுவினருக்கு ஏற்படும் அசௌகரியங்களுமேயாகும் .இதனை 29-01-2013 முதல் மூடிவிடப்போவதாக சுகாதார அமைச்சுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கான விடுதி தொடர்பான முன்மொழிவு ஆவணமானது திட்டமிடல் பிரிவினூடாகஅனுப்பப்பட்டு 30-3-2012இல் நடந்த கூட்டத்தில் செயலாளரினால் இதற்கான அங்கீகாரம் மற்றும் நிதி ஒதுக்கீடு என்பன வழங்கப்படும் என்று எமது சங்கத்திற்கு உத்தரவாதம் தரப்பட்டது.
பின்னர் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நடைபெற்ற நிர்வாக் குழுக் கூட்டத்திலும் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் போன்றோர் முன்னிலையிலும் இது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது ஆயினும் இதனை அமுல்படுத்த எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
விஸேட சிகிச்சைச் சேவைகளை விரிவாக்கும் எந்த நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு மேற்கொள்ளவில்லை.பல தசாப்தகாலமாக எவ்வித சிகிச்சை நிலையக் கட்டிடங்களும் புதிதாக அமைக்கப்படவில்லை ,புற்றுநோய் பிரிவை பூரணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இங்கு பொருத்தமான கதிர் வீச்சு இயந்திரம் பொருத்தப்படுவதுடன் எவ்வித தாமதமுமின்றி மட்டக்களப்பு விபத்து மற்றும் அவசரகால செயற்த்திட்டம் ஆரம்பிக்க வேண்டும் மேலும் எமக்கு அவசரமாக ஒரு கெத் லெப் கட்டிடமும் அதற்கான நோயாளர் விடுதித் தொகுதியும் தேவையாக உள்ளது.
அனைத்து அபிவிருத்தி வேலைகளுக்கும் பொருத்தமான நிதி வழிவகைளைக் கொண்டு பிரதான கட்டிடம் அமுல்படுத்தப்பட வேண்டும் ஏனெனில் எமக்கு மகப்பேற்று ,பி.பி.ஓ. தொகுதி சத்திரசிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு ஐ.சி.யு தொகுதி சவச்சாலைத் தொகுதி போன்றவையும் அவசியமாகவுள்ளது.
உயர் நிலை வைத்தியசாலை அதாவது போதானா வைத்தியசாலையான இதனை மருத்துபீடத்தோடு இணைத்துள்ள நிலையில் புறக்கணிப்பு செய்வதானது பாரபட்டமான ஒரு நடவக்கையேயாகும்.
தற்போதுள்ள பழைய கட்டிட அமைப்புக்கள் கூட முறையாக பராமரிக்கப்படுவதில்லை தொழிநுட்ப உத்தியோகத்தர் இன்மை கொந்தராத்தராத்துகாரர்களின் தரமற்ற கட்டிட வேலைகள் காரணமாக புனர்நிர்மான வேலைகளைத் தாமதிப்பதுடன் மீன்டும் மீன்டும் செலவீனங்களை ஏற்படுத்தியுள்ளன.
சேவைகளின் தேவைக்கேற்ப நிறுவனத்தின் வளங்கள் பங்கிடப்படுவதில்லை அரசியல் மற்றும் அமைச்சரின் ஆதிக்கத்தின் படியே போதனா வைத்தியசாலையில் அது நடைபெறுகின்றது.
போதனா வைத்தியசாலையில வைத்தியர்கள் இல்லாத நிலையில் இங்குள்ள ஏனைய மாவட்ட பொது வைத்தியசாலைகளுக்கு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனைப் போலவே முழு நாட்டிற்குமான மருத்துவர், தாதியர்கள்,ஏனைய சுகாதார மற்றும் சிற்றுழியர் நியமனங்களில் கூட பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.
இதே போல உரிய உபகரணங்கள் அதாவது விஸேட சிகிச்சைப் பிரிவிற்கான என்டஸ் கோப்,லெப்ரெஸ் கோப் போன்றவற்றை கூட சுகாதார அமைச்சு வழங்காமல் உள்ளது. பி.எம்.ஈ. யினால் அங்கீகரீக்கப்பட்டும் கூட அவையும் வழங்கப்படவில்லை.
இது வரை தேசிய சுகாதார அபிவிருத்தி தாதியின் ஊடாக செயலாளரினால் அங்கீகரிக்கப்பட்ட உயிர்காப்புக் கருவிகள் இங்கு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.
இவ்வாறு இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் .
இவ்வாறான உண்மை நிலையினைப் புரிந்து கொள்ளாத நிலையில் பொதுமக்களிடமிருந்து பெருமளவிலான குற்றச்சாட்டுகளை எமது போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தனிப்பட்ட ரீதியில் எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே இவ்வாறான நிலைமையினைப் பொது மக்களுக்கு அறியத்தருவதற்கு இச்சந்தர்பத்தினை ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாக கருதுகின்றோம்.
எமது வைத்தியசாலைப் பணிப்பாளர் சுகாதார அமைச்சினையும்,அரசாங்கத்தையும் குற்றம் சுமத்தினாலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இங்கு இடம்பெற்றுவரும் நிர்வாக மற்றும் நிதி ஒழுங்கினங்களைச் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.
அமைச்சு மற்றும் அரசாங்கம் ஊடாகக் கிடைக்கும் வளங்கள் கூட பணிப்பாளரினால் துஸ்பிரயோகம் அல்லது முறையற்ற பிரயோகம் செய்யப்படுகின்றன என்பதற்கு எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன.
இவை சம்மந்தமாக நீதியான விசாரணையினை மேற்கொள்ளுமாறு அரச மருத்துவர்கள் சங்கத்தினூடாக சுகாதார அமைச்சின் செயலாளரிடம் முறையிட்டும் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.




Leave a comment