பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனம் வழங்குவதற்கென 1500 கிலோ அரிசி அஸாத் ஸாலி பவுன்டேஸன் நிறுவனத்தால் இன்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திடம் கையளிக்கப்பட்டது.
அஸாத் ஸாலி பவுன்டேஸன் நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயருமான அஸாத் ஸாலியினால் கொழும்பிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 1500 கிலோ அரிசி மூடைகள் கையளிக்கும் நிகழ்வு இன்று இரவு நடைபெற்ற போது காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அஹமட் லெவ்வை , அதன் உப தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத் (BA) , அதன் செயலாளர் மௌலவி அப்துல் காதர் (பலாஹி) ஆகியோர்களிடம் சம்மேளனத்தின் காரியாலயத்தில் வைத்து அஸாத் ஸாலி பவுன்டேஸன் நிறுவனத்தின் அமைப்பாளர் ஏ.எல்.ஏ. கனியினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், ஆஸாத் ஸாலி பவுன்டேஸன் நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
குறித்த அஸாத் ஸாலி பவுன்டேஸன் நிறுவனமானது பல்வேறு அரசியல், கல்வி, சமூக அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









Leave a comment