– பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடிப் பிரதேசத்தில் நாளாந்தம் சேரும் திண்மக்கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக திண்மக்கழிவுகளை பசளைகளாக மாற்றும் திட்டமொன்றை காத்தான்குடி நகரசபை ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கள் ஸ்தாபனத்துடன் (யுனப்ஸ) இணைந்து மோற்கொள்ளவுள்ளது.
இதற்காக புதிய காத்தான்குடி ஏ.எல்.எஸ். மாவத்தையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் 32 இலட்சமும் காத்தான்குடி நகரசபை 72 இலட்சம் மொத்தமாக 104 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட காணியில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பரின் வேண்டுகோளுக்கினங்க யுனப்ஸ் நிறுனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கான காணியை பார்வையிடுவதற்காக யுனப்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு அம்பாறை ஒருங்கிணைப்பாளர் திருமதி சீலியா, சிரேஷ்ட நிலப்பரப்பு தள பொறியிலாளர் சாலிய எஸ் விக்கிரமரத்ன, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் அதிகாரிகள் நேற்று விஜயம் செய்தனர்.
இதன்போது கட்டிட நிர்மாணப்பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.






Leave a comment