மட்டு. காத்தான்குடியில் 04டெங்கு நோயாளர்கள் – டெங்கை கட்டுப்படுத்த நடவடிக்கை

பழுளுல்லாஹ் பர்ஹான்

 

denkuமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக நுளம்புகள் பெருகி ஆட்கொல்லி டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதால் காத்தான்குடி நகரசபையும் காத்தான்குடி பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் இணைந்து வீடுகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நகரசபைத் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

வீடுகளை பரிசோதனை செய்யும் வேளையில் வீடுகள் அசுத்தமாக டெங்கு நோய் பரவும் சூழல் காணப்படின் 25ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் அல்லது ஆறுமாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் காத்தான்குடி பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் விடுக்கப்பட்ட பொது அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வீடுகள் காணிகள் வெற்று நிலங்கள் கட்டிடங்கள் என்பவற்றை நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைக்குமாறும் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by

Leave a comment