பழுளுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் தோன்றி இருப்பதால் பொது மக்களை விழிப்புடன் இருக்குமாறு சுகாதார சேவைகள் பணினைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
குறித்த மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன் கழிவுநீர் கலந்து நீர் அசுத்தமடைந்துள்ளதால் நுளம்புகள் அதிகம் பெருகும் அபாயமும் காணப்படுகின்றது. இதனால் ஆட்கொல்லி டெங்கு நோய் போன்ற நோய்கள் பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதால் மக்கள் பெரிதும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
மட்டு – அம்பாறை மாவட்டங்களில் பரவலாக பல இடங்களில் இந்த தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment