தேசிய மீலாத் விழா

பழுளுல்லாஹ் பர்ஹான்

DSC04227அகில இலங்கை தேசிய மீலாத் விழா இன்று திருகோணமலை கிண்ணியா மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

வெகுவிமர்சையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தசாசன மத விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் எம்.கே.எஸ். குணவர்த்தன, சிரேஸ்ட அமைச்சர் பௌஸி, உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத், பாராளுமன்ற உறுப்பினறும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அஸ்வர் ஏ.ஆர்.ஏ.எம்.காதர், கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சரும் ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் எஸ். உதுமாலெப்பை, பாடசாலை அதிபர்கள், மும்மதப் பெரியார்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் சவூதி அரேபியாவில் நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற றிஸ்கானும் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

DSC04158

DSC04160

DSC04181

DSC04205

DSC04207

DSC04227

DSC04314

DSC04365

DSC04374

Published by

Leave a comment