காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் அல்குர்ஆன் மனனப் பிரிவு ஆரம்பம்

– டீன் பைரூஸ்.

DSC00034காத்தான்குடி 5,  ஜாமியுழ்ழாபிரீன் மீரா  ஜூம்ஆ பள்ளிவாயலில் புதிதாக அல்குர்ஆன் மனனப்பிரிவு  (25.01.2013 வெள்ளிக்கிழமை) இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காத்தான்குடி ஜாமியதுல்  பலாஹ் அறபுக் கல்லுாரியின் அதிபா் மௌலானா மௌலவி அல்ஹாஜ்.MA. அப்துல்லாஹ் (றஹ்மானி) அவா்கள் கலந்து கொண்டு சிறப்பத்தார்கள்.

‘ஜாமியுழ்ழாபிரீன் அல்குர்  மனனம் பிரிவு’ என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட  இந்த  அல்குா்ஆன் மனனப் பிரிவுக்கு, இதுவரை  32 மாணவா்கள் சோ்த்துக் கொள்ள்ளப்பட்டுள்ளனர். இப்பள்ளிவாயல் நிர்வாக சபையின் கீழ் இயங்கும் அல்-குா்ஆன் மனனப்பிரிவுக்கு  உஸ்தாது மார்களாக அல்-ஹாபிழ் முகம்மது றிஸ்வி, மௌலவி அல்ஹாஜ் அல்-ஹாபிழ். M.M. முகம்மது இா்சாத் (பலாஹி) ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இங்கு கல்வி பயிலும் மாணவா்களிடமிருந்து எவ்விதமான கொடுப்பனவும் பெறுவதில்லை என்பதும் குறிப்படத்தக்கது.

 புதிய மாணவா்களுக்கான மனனப் பிரிவு மௌலானா மௌலவி அல்ஹாஜ்.MA. அப்துல்லாஹ் (றஹ்மானி) அவா்களினால் ஆரம்பித்த வைக்கப்பட்டதுடன் , மாணவா்களுக்கு இலவச அல்குா்ஆன் பிரதிகளும்  வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பல உலமாக்கள், நிர்வாக சபை உறுப்பினா்கள், ஜமாஅத்தார் ஒன்றியத்தின் அங்கத்தவா்கள், ஜமாஅத்தார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்,DSC00036DSC00005DSC00041DSC00037DSC00043DSC00017DSC00007DSC00028DSC00023

Published by

Leave a comment