காத்தான்குடியி்ல் டெங்கு பரவும் அபாயம் நகர முதல்வரின் கண்டிப்பான உத்தரவு

chirman asparFK-42.

தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக காத்தான்குடியின் சில  இடங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி பொதுச் சுகாதார அதிகாரிகள் மேற் கொண்ட சுற்றி வலைப்பின் போதே இது தெரிய வந்துள்ளது.

காத்தான்குடி ஸாவியா வீதி, கபுரடி வீதி மற்றும் வேறு சில பகுதிகளிலும் டெங்கு அபாயம் உள்ளதுடன் புதிய காத்தான்குடி மட்/ அல் அமீன் வீதியைச் சோ்ந்த 08 வயது சிறுவன்  டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மட்டக்களளப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சுற்றுச் சூழலை சுத்தமாக வைக்கத் தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற் கொள்ள இருப்பதாகவும், குறைந்த  பட்ச தண்டனையாக 25000/= ரூபா அபராதம், ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் காத்தான்குடி நகர முதல்வர் அல்ஹாஜ்.SHM.அஸ்பர் JP  தெரிவித்துள்ளார்.nulammpu

Published by

Leave a comment