கமல் இன் விஸ்வரூபம்: முஸ்லீம்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள் – ஓர் ஆய்வு

25-1359089750-viswaroopam-tmm-600[1]-MJ

இலங்கையில் 1990களில் நடிகர் கமல்ஹாஸன் ஓர் தனி நாயகனாக சினிமா இரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்த காலம்! ‘பைலா’ எனக்கூறி 100 பேரை ஒரே அடியாய் அடித்து மந்திரகதியில் காயங்கள் இல்லாமல் தப்பி.  தான் நாயகன்(HERO) என்பதை போலி சினிமாவில் நிறுபித்து  வந்த அப்போதைய நடிகர்களாக திகழ்ந்த ரஜனிகாந்த், சத்தியராஜ் விஜயகாந்த் போன்ரோர்களுக்கு மாறாக, அமைதியான யதார்த்தமான கதைகளால் இலங்கை சினிமா உள்ளங்களைக் கட்டிப் போட்டவர்தான் இந்த கமல்!

அதன் பின்னர் ‘பொலிவூட்’  ஹிந்திப்படங்களில் பாகிஸ்தானை எதிர்க்கும்  பாத்திரங்களில் பெயர்தாங்கி இந்திய முஸ்லிம் நடிகர்கள் நடிக்க, அப்படங்களைப் பிரமாண்டமான முஸ்லிம் இயக்குநர்கள் இயற்றி, இசையும் வழங்கி 100 நாட்களைத் தாண்டிய வெற்றிப்படங்களாக  சாதித்ததைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும்  பாகிஸ்தானை தீவிரவாதி எனக் காட்டி, மறைமுகமாக முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகளை ஏற்படுத்திய தமிழ் படங்களும் வெற்றிபெற்றன!

மாறாக, 1993-94 காலப்பகுதியில் வெளிவந்த பொம்பே (பம்பாய்) திரைப்படம் முஸ்லிம் தீவிரவாதத்தைக் கைவிட்டு, இந்து-முஸ்லிம் காதல் கதையில் எடுக்கப்பட்டு, வெற்றிபெற்றது. முஸ்லிமான நாயகி, குர்ஆனையும் தனது பெற்றோரையும் துறந்து, காதலுக்காக ஓர் இந்து இளைஞனிடம் செல்கின்றாள்.

இப்படத்தை இயற்றிய மணிரத்தினம்  அபபோது விரல்விட்டு எண்ணக்கூடிய இந்திய முஸ்லிம்களால் விமர்சிக்கப்பட்டார். சில கைகுண்டுகளும் இயக்குனரின் வீட்டிற்கு எரியப்பட்டதாக அப்போதைய இந்திய அச்சு ஊடகங்கள் தலைப்பிட்டிருந்தன.

இருந்தும் பாடல்களால் படத்தை ‘ஹிட்’ ஆக்கிய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவரும் ஓர் முஸ்லிம். இலங்கையில் மக்கள் எவ்வித தயக்கமும் இன்றி, கண்டணங்களும் இன்றி, எதிர்ப்புக்களும் இன்றி பல முறைபார்த்து இரசித்த படங்களுள் பம்பாய் ஒன்றாகும்.

சினிமாவும் கிரிக்கட்டும் என்றிருந்த தமிழ்நாடு முஸ்லிம்களின் இஸ்லாமிய சிந்தனை தற்பொழுது வளர்ச்சியடைந்திருப்பதே ‘விஸ்வரூபம்’ எதிர்ப்புக்கான பிரதான காரணமாக அமைகின்றது. அதன் பின்னணில் இலங்கையும், உலகில் வாழும் தமிழ்பேசும் இஸ்லாமியர்களும் சிந்திக்கத் தொடங்கி இருக்கின்றனர் என்பதை ஒட்டுமொத்தமான எதிர்ப்பு எடுத்தியம்புகின்றது.

இனிமேலும் தமிழ்நாட்டிலோ அல்லது ஹிந்தி சினிமாவிலோ முஸ்லிம்களை விமர்சிக்கககூடிய, எதிர்க்கக்கூடிய, கேவலப்படுத்தக்கூடிய கதைகள் பேனா முனைகளில் சுரக்கக்கூடாது .

இந்துக்களை புண்படுத்தும் வகையிலான காட்சிகளை வைத்ததாக இதற்கு முன்பு குற்றச்சாட்டுக்குள்ளான கமல்ஹாசன் இப்போது  ஒட்டுமொத்த தமிழ்பேசும் இஸ்லாமியர்களின் குமுறலுக்குள்ளாகியுள்ளார். படத்தை பார்த்த பின்னர் வட இந்தியாவிலும் எதிர்ப்புக்கள் எழலாம்!

பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

விஸ்வரூபத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள்:

தொழுதுவிட்டு கொலை.
தீவிரவாதிகளின் கையேடு அல்-குர்ஆன்.
எதிரியின் கழுத்தை அறுப்பதை அப்படியே காண்பிப்பது.
பள்ளிவாயல்கள் தீவிரவாதிகளின் புகழிடம்.
அமைதியின் சின்னமான புறாக்களையும் கொல்லுதல்.
தமிழ் பேசுபவர்களை இழிவுபடுத்தியுள்ளார்.

ஆந்திராவில் இன்று இத்திரைப்படம் திரையிடப்பட்டிருக்கின்றது. பெங்களுரில் திரையிடப்படவில்லை. இவ்வாறிருக்க, ஒருவாரமாக கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் விஸ்வரூபத்துக்கு, சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் எந்த எதிர்ப்பையோ அல்லது ஆதரவையோ வெளிப்படுத்தாமல் இருப்பது பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றது.(MJ)

Published by

Leave a comment