விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இலங்கையில் தடை

viswaroofam_200_89[1]கமல் ஹஸனின் சரச்சைக்குரிய விசுவருபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிட இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இலங்கையில் நாளை வெள்ளிக்கிழமை திரையிடப்படவிருந்த இப்படத்தில் முஸ்லிம்களைப் புண்படுத்தும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தணிக்கை குழுவினர் தெரிவித்துள்ள போதிலும் இது தொடர்பில் மேலும் விசாரணகள் மேற்கொள்ளப்படும் நோக்கில் இத்திரைப் படத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுளளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் நாட்டில் இத்திரைப்படத்தை தடை செய்தபோதிலும் செய்மதியூடாக நேற்று இந்தியாவில் பாதிப்பேர் இப்படத்தை பார்த்துள்ளார்கள் என்றும் அமைச்சரவை முடிவூகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment