– MSM. சஜி
அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
அகிலத்திற்கு அருட்கொடையாக அவதரித்த அண்ணல் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினமான இன்றைய தினம் முஸ்லிம்கள் அவர்களின் வாழ்க்கை வழி முறைகளையும் போதனைகளையும் நினைவு கூரும் ஒரு தினமாகும்.
சமாதானம், நல்லிணக்கம், கருணை, சுயநலமின்மை, பரஸ்பரப் புரிந்துணர்வு, சகோதரத்துவம், நீதி மற்றும் நேர்மை என பல உயர் விழுமியங்களை நபி அவர்கள் தனது போதனைகள் மூலம் முன்வைத்தார்கள்.
இந்தப் போதனைகளுக்கேற்ப தமது வாழ்க்கையை மீளமைத்துக்கொள்வதற்கு மீலாதுன்நபி விழா முஸ்லிம்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகும்.
நபியவர்களது போதனைகள்முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது சகல இனமக்களின்வாழ்க்கைக்கும் வழிகாட்டுபவையாகும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானமும் சுபீட்சமும் நிலைபெறநாம் நபியவர்களின் போதனைகளையும் வழிகாட்டல்களையும்பினபற்ற வேண்டியது அவசியமாகும். அவை எமது சமூகத்தின் ஐக்கியத்திற்கும் சகவாழ்விற்கும் மிகப் பெரும் பலமாகவும் ஆசிர்வாதமாகவும் அமையும்.
இன்றைய தினத்தில் சகலருக்கும் எனது மகிழ்ச்சிகரமான மீலாதுன் நபி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பா.உ.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர்.
Leave a comment