வடக்கிலிருந்து கிழக்கை நோக்கிய மனிதாபிமான உதவி…

DSC00020டீன் பைரூஸ்.

HUMEDICA-International-AID  நிறுவனத்தின்  உலா் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு  23.01.2013 புதன்கிழமை  மாலை 05.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயளாலர் அல்ஹாஜ்.SHM. முஸம்மில் SLAS அவா்களின் தலைமையில் நடை பெற்றது.

மனித நேயம், சமூக மேம்பாடு, மனிதாபிமான உதவிகள் என்ற கோட்பாடுகளுடன் தொன்டாற்றி வரும் நிறுவனங்களில் ஒன்றுதான் Humedica International Aid  நிறுவனமாகும்.

நிறுவனத்தின் ஸ்தாபகர் வணக்கத்துக்குரிய பிதா ராஜஸூரிய அவா்களின் சிறந்த வழிகாட்டலில் வடக்கிலிருந்து தொண்டாற்றும் நிறுவனம் இம்முறை வெள்ளத்தினால் மிகக் கடுயைாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு 6.5 மில்லியன் பொறுமதியான உலா்-உணவுப் பொருட்களை வழங்கியிருந்தது.

இதற்கான முழு ஏற்பாடுகளையும் மட்-மாவட்ட அரச அதிபர் திருமதி. S.சாள்ஸ். SLAS அவர்கள் மேற் கொண்டிருந்தார்கள். காத்தான்குடியில் உள்ள சுமார் 500 குடும்பங்களுக்கு மேற்படி நிவாரனம் வழங்கப்பட்டன.

DSC00014DSC00015DSC00018

Published by

Leave a comment