“மேற்கத்தேய எண்ணெய்க் கொள்வனவைப் பார்க்கிலும் எமது விஞ்ஞானிகளால் 10 மடங்குகள் அதிக இலாபம்”

மேற்குலகத்திற்கு பரிகாசம் செய்து சவால் விடுகிறார் அகமதி நெஜாத்

-MJ

2012112120537984734_20[1]  “மேற்குலகம் எமது எண்ணெய் கொள்வனவை திட்மிட்டு கைவிட்டனர். அது மாத்திரமன்றி எம்மிடம் எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகளையும் கொள்வனவு செய்யாது தடுத்து வந்ததுடன் அந்நாடுகளுக்கு தனிப்பட்ட அழுத்தங்களையும் கொடுத்து வந்தனர்”.

“மேற்குலகம் எமது எண்ணெய்க் கொள்வனவைப் புறக்கணத்தன் பின்னர் எமது விஞ்ஞானிகளாலும் அவர்களின் அபார கண்டு பிடிப்புக்களாலும் எமது பொருளாதாரமும் வருமானமும், மேற்குலகம் எம்மிடம் எண்ணெய் கொள்வனவு செய்யும் போது கிடைக்கும் வருமானத்தைப் பார்க்கிலும் 10 மடங்கு அதிக இலாபத்தை இஸ்லாமியக் குடியரசான ஈரான் பெற்றுள்ளது”  என்பதாக மேற்குலகை பரிகாசம் செய்து, அவர்களுக்கு சவால் விட்டு ஈரானின் ஜனாதிபதி அகமதி நெஜாதி கூறி இருக்கின்றார்.

A dealer counts the dollar banknotes as

நேற்று தெற்கு ஈரானின் ஹம்தான் நகரில் பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றிய அகமதி நெஜாதி இத்தகவலை மகிழ்ச்சியுடன் ஈரானிய மக்களுக்குத் தெரிவித்தார்.

“மேற்குலகம் எம்மிடம் எண்ணெய் கொள்வனவு செய்யாமல் இருப்பது மேலும் நன்று”  எனவும் “அதன் காரணமாகவே எமது விஞ்ஞானத்துறை மென்மேலும் வளர்ச்சியடைந்து இத்தகைய ஓர் வருமானத்தை ஈட்டி இருக்கின்றது” என்பதாகவும் பெருமிதத்துடன் அவர் மேலும் கூறினார்.

எண்ணெய் (Oil) மற்றும் வாயு (Gas) ஏற்றுமதிகள் மூலமாக ஈரான் 80 வீதமான வருமானத்தை ஈட்டிவந்தது. மேற்குலகின் எண்ணெய் கொள்வனவு பகிஸ்கரிப்பின் பின்னர் 45 வீதமாக கடந்த வருடம் வீழ்ச்சியடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. (MJ)

Published by

Leave a comment