போலி ஆவணங்களுடன் மத்திய கிழக்கு செல்ல முற்பட்ட பெண் விமான நிலையத்தில் கைது

wodpress_security[1]போலி ஆவணங் களுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல் லக்கூடிய வயதை பூர்த்தி செய்யாத யுவதி ஒருவர் குழந்தை பராமரிப்புக்காக வெளிநாடு செல்ல முற்படுகையில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா விசாவுடன் மலேஷியா செல்வதற்காக விமான நிலையம் வந்த இரண்டு யுவதிகளை விமான நிலையத்தின் பணியக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதில் ஒரு யுவதி (20 வயதையுடைய) வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் களவாக வெளிநாடு செல்ல எத்தனித்துள்ளார்.

என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு செல்லும் விதத்தில் போலி முத்திரை இடப்பட்ட நிலையில் சவூதி செல்ல முற்பட்ட மேலும் 4 பெண்களையும் பணியகத்தின் விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பணியகத்தில் கடவுச்சீட்டில் பதியப்படும் முத்திரை போன்றே போலி முத்திரை தயாரித்து இவர்களை வெளிநாடு அனுப்ப முற்பட்ட உப முகவர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மருதானை பகுதியிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றின் உப முகவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களை போலி ஆவணங்கள் தயாரித்து வெளிநாடு அனுப்பும் உப முகவர்கள் குறித்து பணியகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறானவர்கள் தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

-தினகரன்

Published by

Leave a comment