ரூ. பத்து இலட்சம் நிதியுதவி: சகோதரருக்கு தொழில் வாய்ப்பு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்பட்ட ரிஸானா நபீக்கின் பெற்றோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தனர். நேற்றுக் காலை இச்சந்திப்பு இடம்பெற்றதுடன், ஜனாதிபதி அவர்கள் ரிஸானாவின் பெற்றோர்களிடம் தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.
இதன்போது தாம் எதிர் நோக்கிய துயரங்களை ரிஸானாவின் பெற்றோர் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினர். ஜனாதிபதியின் பணிப்பிற்கிணங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் ரிஸானாவின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டதுடன் அதற்கான காசோலையையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது ரிஸானாவின் பெற்றோரிடம் கையளித்தார்.
இதன்போது ரிஸானா நபீக்கின் சகோதரருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் திருகோணமலை மாவட்ட கிளை அலுவலகத்தில் தொழில் வாய்ப்பு ஒன்றும் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இதற்கான நியமனக் கடிதத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கையளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தெளபீக் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் டிலான் பெரேரா, கிழக்கு மாகாண முதல்வர் நஜீப் ஏ. மஜீத், திருகோணமலை மாவட்ட எம்.பி. எம். எஸ். எம். தெளபீக், ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி., இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் அமல் சேனாதிலங்காதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Leave a comment