காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமாவின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் 1434/2013

– அஷ்ஷெய்க் CMM. அமானி:

jammiyya 2(நிகழ்ச்சி நிரல் கீழ் இணைக்கப்பட்டுள்ளது)

மௌலவி/அல்ஹாபிழ்/அஷ்ஷெய்க் :  ………………….

அன்புடையீர்,             

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ

வருடாந்த பொதுச் சபைக்கூட்டம் ஹிஜ்ரி 1434/2013

நமது ஜம்இய்யாவின் வருடாந்த பொதுச் சபைக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22.02.2013 வெள்ளிக்கிழமை (ஹிஜ்ரி 1434 றபீஉல் ஆகிர் 11) நடைபெறவிருக்கின்றது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கிளைகளில் ஒரு முன்னணி நிறுவனமாக முழு இலங்கையிலும் மதிக்கப்படும் அளவிற்கு நமது ஜம்இய்யா சிறப்பாகச் செயற்பட்டு வருவதைத் தாங்கள் அறிவீர்கள். அத்துடன் நமது பிரதேசத்தின் சமய, சமூகப் பணிகளில் இது காத்திரமான பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கின்றது. தங்கள் போன்ற நமது சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், உற்சாகமான செயற்பாடுமே இவற்றுக்கெல்லாம் காரணமாகும்.

சிறப்பு மிக்க ஷரீஆக் கல்வியைக் கற்ற நாம், சமூகத்திற்கான பங்களிப்பைச் செய்வதற்கு இந்த ஜம்இய்யாவைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எனவே,  நமது ஜம்இய்யாவை எதிர்காலத்திலும் சக்திமிக்க ஓர் அமைப்பாக வளர்த்தெடுப்பதற்கு நமது பங்களிப்பைச் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த வகையில் கீழ்காணும் விபரப்படி நடைபெறவுள்ள நமது ஜம்இய்யாவின் வருடாந்தப் பொதுச்சபைக்கூட்டத்திற்கு தவறாது சமூகமளித்து தங்களது மேலான ஒத்துழைப்பையும், பேராதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கினறோம்.

இத்துடன் நிகழ்ச்சி நிரல் இணைத்தனுப்பி வைக்கப்படுகின்றது.

காலம்:
22.02.2013 – வெள்ளிக்கிழமை.
றபீஉல் ஆகிர் 11 ஹிஜ்ரி 1434

நேரம்:
பிற்பகல் 04.00 மணி (அஸர் தொழுதவுடன்)

இடம்:
ஜம்இய்யதுல் உலமா ஒன்றுகூடல் மண்டபம்.

குறிப்பு:

01.    இமாம்களாகக் கடமையாற்றும் உலமாக்கள் மஃரிப் தொழுகைக்காக பிரிதொருவரை நியமிப்பது பொருத்தமாகும் எனவும்

02.    ஜம்இய்யாவின் நிதி நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு 2013/ஹிஜ்ரி 1434ம்  வருடத்திற்கான சந்தாப்பணம் 200/- ரூபாவை உடன் கொண்டு வந்து உறுப்புரிமையைப் புதுப்பித்துக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

செயலாளர்,
அஷ்ஷெய்க் MH.  ஜிப்ரி (மதனி) BA.

بسم الله الرحمن الرحيم

ஜம்இய்யதுல் உலமா – காத்தான்குடி
வருடாந்த பொதுச்சபைக்கூட்டம். ஹிஜ்ரி 1434 / 2013
22.02.2013 – வெள்ளிக்கிழமை.
றபீஉல் ஆகிர் 11 ஹிஜ்ரி 1434

நிகழ்வன

பி.ப.    4.00 – வரவு பதிதல்.
பி.ப.    4.15 – திலாவதுல் குர்ஆன்.
பி.ப.    4.30 – தலைமையுரை – தலைவர்     மௌலவி. அல்ஹாஜ் SM. அலியார் (பலாஹி)                                                                

பி.ப.    4.40 – வரவேற்புரை – உப தலைவர் மௌலவி. அல்ஹாஜ்  MHM. புஹாரி (பலாஹி) BA.

பி.ப.    4.50 – சென்ற வருட பொதுச்சபைக்கூட்டறிக்கை – உப தலைவர். அஷ்ஷெய்க் MCM. றிழ்வான் (மதனி) BA.

பி.ப.    5.00 – சென்ற ஆண்டின் ஜம்இய்யா செயற்பாட்டறிக்கை – செயலாளர். அஷ்ஷெய்க் MH. ஜிப்ரி (மதனி) BA.

பி.ப.    5.20 – கணக்கறிக்கை – பொருளாளர் மௌலவி AM. அப்துல் காதர் (பலாஹி) JP.

பி.ப.    5.30 – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள் உரை
பி.ப.    6.00 – சிற்றுண்டியும் இடைவேளையும்
பி.ப.    6.15 – மஃரிப் தொழுகை
பி.ப.    6.30 – ஜம்இய்யாவின் மூத்த உலமாக்கள் கௌரவிப்பு நிகழ்வு
பி.ப.    6.45 – சபையோர் குறிப்புரை

பி.ப.    7.00 – நடப்பு ஆண்டிற்கான புதிய செயற்குழு உறுப்பினர் தெரிவு

நடப்பு ஆண்டின் புதிய தலைவர் உரை –
நடப்பு ஆண்டின் புதிய செயலாளர் நன்றியுரை –
கப்கபாரதுல் மஜ்லிஸ்

இஷாத் தொழுகையுடன் பொதுக்கூட்ட நிகழ்வுகள் யாவும் நிறைவு பெறும்.

Published by

Leave a comment