– எம்.எல்.எம். அன்ஸார்
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் மற்றும் ஐ.ஒ.எம். பிரதி நிதிகள் ஆகியோர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை அமைச்சில் இடம் பெற்றது.
இதன் போது மீள்குடியேறிய மக்களுக்கும் இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பி வரும் அகதிகளுக்கும் 2013 ஆண்டில் செய்து கொடுக்கப்பட இருக்கும் வாழ்வாதார உதவிகள் தொடர்பான செயற்திட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
படத்தில் அமைச்சின் செயலாளர் பீ.எச்.ஜே.பி. சுகததாஸ, மேலதிகச் செயலாளர் எம்.எம். நயீமுதீன், ஐ.ஒ.எம். பிரதி நிதிகள் காணப்படுகின்றனர்.


Leave a comment