காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லுாரியின் அருகில் வசித்து வந்த MAA.முகைதீன். JP (Manager) அவா்கள் ( 22.01.2013 செவ்வாய்க்கிழமை) காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிறாஜியுன். அன்னார் காத்தான்குடி பழைய வீதி முகைதீன் தைக்காவின் ஆரம்பகால நிர்வாக சபை உறுப்பினரும், காத்தான்குடி றிபாயிய்யா தரீக்காவின் ஆயுட்கால உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாஸா தொழுகை காத்தான்குடி 4, பழைய வீதி முகைதீன் தைக்காவில் தொழுகை நடாத்தப்பட்டு காத்தான்குடி 5, ஜாமியுழ்ழாபிரீன் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோமாக.
Leave a comment