பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் நாட்டினுள் கொண்டுவருவது முற்றாக தடைசெய்யப்படும். இத்தகைய தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்காக புதிதாக நவீன தொழில் நுட்ப கருவிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.
தொலை தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட இத்தகவலைத் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படும் கையடக்க தொலைபேசிகள் அனைத்தும் IMEI இலக்கங்களுடன் தொலை தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்படல் வேண்டும்.எனினும் பெரும் எண்ணிக்கையான தொலைபேசிகள சட்டவிரோதமாகவே நாட்டினுள் கொண்டுவரப்படுவதாக பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட சுட்டிக்காட்டினார்.
பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் நாட்டில் புழக்கத்தில் இருப்பதால் பாரிய பிரச்சினைகள் உருவாக ஏதுவாகின்றன. எனவே இத்தகைய தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்காக புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தவும் தொலை தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இதன்படி Central EIR ( Central Equipment Identity Register ) என்ற பெயரில் உத்தேச வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் இது தொடர்பாக தேவையான நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் இவ்வருட இறுதிக்குள் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்படவுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்படும் இந்த அதி நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் ஊடாக குறித்த சட்டவிரோத தொலைபேசிகளின் சமீக்ஞைகள் மற்றும் அதன் செயற்பாடுகள் துண்டிக்கப்படும்.
இதன்மூல் சட்டவிரோத தொலைபேசிகளின் பாவனையை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட நம்பிக்கை தெரிவித்தார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment