இலவச சீருடை வழங்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையில்…..

OLYMPUS DIGITAL CAMERAடீன் பைரூஸ்.

புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் சுப்பா் மார்க்கட் கட்டிட வளாகத்தில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் ( HPS ) இலவச சீருடை வழங்கும் நிகழ்வு  ( 18.01.2013 வெள்ளிக்கிழமை ) அதன் பணிப்பாளர் அல்ஹாஜ்.HMM.பாக்கீர் BA/JP அவா்களின் தலைமையில் நடை பெற்றது. மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சா்  கௌரவ அல்ஹாஜ்.MLAM.ஹிஸ்புல்லாஹ் MA/MP அவா்கள் கலந்து கொண்டார்.

அல்ஹாஜ்.HMM.பாக்கீர் BA/JP அவா்களின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இயங்கி வரும் இப்பாடசாலையானது இங்கு கல்வி பயிலும் மாணவா்களுக்கு சீருடை, புத்தகப் பை, அனுமதிக்கட்டணம், வங்கிக் கணக்கு, என்பன போன்ற பல்வேறு விடயங்கள் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இப்பாடசாலையில் கல்வி பயிலவென இம்முறை சுமார் 110  க்கும் மேற்பட்ட மாணவா்கள்  அனுமதிக்கப் பட்டுள்ளனா்.

OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment