2012 சர்வதேச சிறுவர், மகளிர், தின, முதியோர் வார விழா இன்று காத்தான்குடியில்

– பழுலுல்லாஹ் பர்ஹான்

DSC030432012 சர்வதேச சிறுவர் மகளிர், தின, முதியோர் வார விழா இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இதன் போது நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,சிறுவர் அபிவிறுத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் மற்றும் அதிதிகளினால் 2012 கெகுழு சிறுவர் கலாசார போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழும்,விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு சர்வதேச மகளிர்,சிறுவர்தின,முதியோர் வார பிறை சிறப்பு மலரின் முதற்பிரதி பிரதேச செயலாளர் முஸம்மிலினால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கிவைக்கப்பட்டதோடு சிறப்பு மலரின் நயவுரையை பட்டதாரிப் பயிலுனர் மௌலவி பி.எம்.எம்.பெரோஸ் நளீமி நிகழ்த்தினார்.

திரிய பியச வீட்டு மானியம் வழங்குதல், சமுர்த்தி சிசுதிரிய புலமைப் பரிசில் சேமிப்பு வைப்புப் புத்தகம் வழங்குதல், சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்ற நிதியிலிருந்து பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்குதல், சிறந்த சிறுவர் கழகங்களுக்கு பரிசு வழங்குதல், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பிர் சிப்லி பாரூக், மட்டக்களப்பு-காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி அலியார் பலாஹி, காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர், காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.எம்.நஸீர்தீன், காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஸா, கா-குடி பிரதேச செயலக கணக்காளர் றெஜினோல்ட், கா-குடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன், கா-குடி பிரதேச செயலக நிருவாக கிராம உத்தியோகத்தர்களான கோமளேஸ்வரன், எஸ்.சுந்தராஜா, கா-குடி சமுர்த்தி வலய முகாமையாளர் எம்.ஏ.எம்.சுல்மி, சமுர்த்தி வலய முமையாளர் N. பரமலிங்கம் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment