பிரித்தானியாவில் உறைபனி: இயல்பு நிலை பாதிப்பு!

heathrow-snow-dela_2456037b[1]

-MJ

தற்பொழுது ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள குளிர்கால உறைபனியால் அந்நாடுகளின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கின்றன.

_50489488_sarahsyeda_heathrow[1]பிரித்தாணியாவிலும் கடந்த 3 நாட்களாகத் தொடரும் உறைபனி காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. போக்குவரத்துக்களும் சில பகுதிகளில் இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன் அநேகமான இடங்களில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஈடுபடுத்தப்படுகின்றன.

_65384778_jerrymeng3[1]ரயில் போக்குவரத்துக்கள் அநேகமான பகுதிகளில் பாதிக்கப்பட்டிருப்பதுடன், தாமதித்த சேவைகளால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் 100 விமானங்களின் நேர அட்டவணைகள் பிற்போடப்பட்டன். 67 விமானங்கள் புறப்பட 33 விமானங்கள் மாத்திரம் தரையிறக்கப்பட்டிருந்தன.

image-2-for-paper-pics-23-12-2010-gallery-666852821[1]விமானசேவை இடைநிறுத்தப்பட்டதாலும், பிற்போடப்பட்டதாலும் ஆயிரக்கணக்கான பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். மைனஸ் 3 தொடக்கம் மைனஸ் 7 வரை தற்போதுள்ள மோசமான காலநிலையால் பயணிகள் மேலும் அவதிப்பட்டனர். இதனால் விசேட உறங்கல் விரிப்புக்களும் ஏனைய வசதிகளும் ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்றிரவு பயணிகளுக்கு வழங்கப்பட்டன.

Snow-at-Heathrow-007[1]மேலதிக உறைபனி தொடர்ந்து எதிர்பார்க்கப்படுவதால் பயணிகள் விமான, ரயில், தரைப் போக்குவரத்துக்களை உரிய இணையத்தளங்கள் ஊடாக புதிய போக்குவரத்து நடைமுறைகளையும் மாற்றங்களையும்  அறந்துகொள்ளுமாறும் கேட்கப்பட்டிருக்கின்றனர்.

Published by

Leave a comment