எல்லைப்பிரச்சினையை முன்னிலைப்படுத்தி தமிழ் – முஸ்லிம் உறவை சீர்குலைக்க முயற்சி: அமீர் அலி

ameer aliமுழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கின்றது என முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள தமிழ் கிராமங்களை ஓட்டமாவடி மற்றும் கோரளைப்பற்று மத்தி செயலக பிரிவுகளுடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை யொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பத்திரிகை யாளர் மாநாடொன்றை நடத்தி முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முற்பட் டிருக்கின்றனர்.

இந்த பத்திரிகையாளர் மாநாடு தமிழ் மக்களுக்கு பிழையான வழிகாட்டலை வழங்கி தமிழ், முஸ்லிம் உறவை மீண்டும் சீர்குலைக்க எடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். உண்மை நிலையை அறிந்து கொள்ளாது பத்திரிகையாளர் மாநாடு நடத்துவதும் அறிக்கை விடுவதும் தமிழ் கூட்டமைப்பின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக இருந்து வருகின்ற எல்லை ரீதியான பிரச்சினைகள் விடுதலைப் புலிகள் இயக்கம் கிழக்கில் கால் ஊன் றியதுடன் ஆரம்பமாகியது. அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக வாழும் பிரதேசங்களான காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச் சேனை மத்திய பிரதேசங்களில் எல்லை ரீதியான பிரச்சினைகள் அதிகரித்தது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிந்து கொள்ளாமல் போனது வேடிக்கையானது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் முஸ்லிம்கள் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்டு அவர்களை கொலை செய்த போது ஏதுமே தமக்கு தெரியாது என்ற ரீதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் அரசியல் மட்டக்களப்பில் இருந்துள்ளது. இதனை எந்த முஸ்லிம் மகனும் மறக்க வில்லை என்பதனை கூறிவைக்க விரும்பு கிறேன். வெறும் அறிக்கை மன்னர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

அல்லது இவ்வாறான செயற்பாடுகளின் மூலமாக முஸ்லிம்களை அடிமையாக்கி வைக்க விரும்புகிறார்களா என்ற சந்தேக மும் ஏற்படுகிறது. மேற்படி நிர்வாக எல்லை நிர்ணயம் என்பதை மாவட்டத்தில் புதிய விடயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு காட்ட ஏன் விளைகிறது என்பது எனக்கு புரியவில்லை.

இது தொடர்பில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதில் மக்களினதும், அரசியல்வாதிகளினதும், பிரதேச அமைப்பு களினதும் வாதப்பிரதிவாதங்கள் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டதை ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மறைக்கப் பார்க்கிறது.

பொது நிர்வாக அமைச்சின் மூலம் தனிப்பட்ட விசாரணைக்குழுக்கள், பனம் பலம் ஆணைக்குழு, புலுமுள்ள ஆணைக் குழு போன்ற ஆணைக்குழுக்கள் பல தடவைகள் பிரதேச செயலகங்களிலும் மாவட்ட செயலகத்திலும் அபிப்பிராயம் பெறப்பட்டது என்பது உண்மை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை கள் மேற்கூறிய இரண்டு சுயாதீனமான ஆணைக்குழுவினர்களின் பரிந்துரைகள் ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு படிக்க மறுக்கிறது.? அல்லது படித்துவிட்டு செய்திக்காக அல்லது தமிழ் மக்களிடத்தில் இன துவேஷத்தினை கிளறி தங்களது வாக்கு வங்கியை சரி செய்துகொள்ளும் முயற்சியா இது என கேட்கத் தோன்றுகிறது. அண்மையில் பட்டிருப்பு தொகுதியில் உள்ள ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதி ஒரு வைபவம் ஒன்றின்போது ஓட்டமாவடி முஸ்லிம் அரசியல்வாதியான அமீர் அலிக்கு இந்த பிரதேசத்தில் இருந்து வாக்களித்தீர்களே என்று மிக துவேசத்துடன் பேசிய பேச்சை தமிழ் பத்திரிகையொன்றில் கண்டு அதிர்ச்சி அடைய நேர்ந்தது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசி அல்லது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அபிவிருத்தி பற்றி பேச வேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவ்வளவு கீழ் மட்டத்திற்குச் சென்று முஸ்லிம், தமிழ் என்று இனத்துவேசம் பேசி அரசியல் செய்ய வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின் றேன். ஏனென்றால் தமிழ் தேசிய கூட்ட மைப்பின் வருகைக்கு முன்பு கே. டபிள்யூ தேவநாயகத்தினை எங்களது பிரதேச மக்கள் தமிழர் என்ற பார்வையில் வாக் களித்து நாடாளுமன்றம் அனுப்பவில்லை. மனித நேயம் உள்ள தலைவன் என்றே நாங்கள் அப்போது அவரைப் பார்த்தோம்.

மேற்படி எல்லல நிர்ணயம் சம்பந்தமான அனைத்து நிகழ்கவுளிலும் எமது பிரதேச மக்களின் எதிர்பார்பினையும் அபிலாஷை களையும் அப்பிரதேச மக்களின் ஆணையைப் பெற்றவன் என்ற முறையில் பதிவு செய்துள்ளேன். ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளையோ எல்லைகளையோ இரகசியமாக செய்ய வேண்டிய தேவைப் பாடு எனக்கில்லை.

மாறாக தமிழ் மக்களுக்கு சேர வேண்டிய நியாயபூர்வமான விடயங்களில் மிகவும் தெளிவாக எனது கருத்துக்களை முன்வைத்துள்ளேன்.

– தினகரன்

Published by

Leave a comment