ரிஸானாவின் வீட்டுக்கு அமைச்சர்கள் குழு இன்று விஜயம்

f-1-1[1]சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நபீக்கின் மூதூர் இல்லத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையில் அமைச்சர்கள் குழு இன்று வெள்ளிக் கிழமை (18) மாலை 3.00 மணிக்கு விஜயம் செய்யவுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புக்கமைய இந்தக்குழு இன்று விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதில் அமைச்சர்களான ஜோன் செனவிரட்ண, பந்துல குணவர்தன, சியம்பலாப்பிட்டிய, அனுரபிரியதர்ஷன யாப்பா, சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, பிரதி அமைச்சர் விஜய முனிசொய்ஸா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர்கள் அடங்குகின்றனர்.

ரிஸானாவின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் இக்குழுவினர் அவர்களது அடிப்படை தேவைகளை உடனடியாக நிறை வேற்றுவதுடன் ஜனாதிபதி நிதியிலிருந்து நிரந்த வீடொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டி வைப்பதாக முதலமைச்சரின் ஆலோசகர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் முகம்மது ஸகீது தெரிவித்தார்.

-தினகரன்

Published by

Leave a comment