பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள் அனைவரும் நாளை 18-01-2013 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து அலுவலகங்கள் , பாடசாலைகள், வியாபார நிலையங்கள் என்பவற்றை புறக்கணித்து போக்குவரத்து செய்யாமல் வீட்டில் அமைதியாக இருந்து எதிர்ப்பை தெரிவிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஒன்றியம் என்ற பெயரில் வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு நகரில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரிய தமிழர்களின் எல்லை கிராமங்களான வாகனேரி, புணானை பகுதிகளை ஒட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைத்து தமிழர் காணிகளை கபளிகரம் செய்யும் முயற்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போரட்டத்தை (ஹர்த்தால்) மேற்கொள்ளுமாறு அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment