2013ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழாவை இம்முறை திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியாவில் கொண்டடுவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.
இது தெடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 8 பிராந்திய உலமாசபையின் தலைவர்- செயலாளர் உட்பட நகர சபை பிரதேச சபை தலைவரகள்- பாடசாலை அதிபர்கள் திணைக்களச் செயலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டடனர்.
தேசிய மீலாத் விழாவை எதிர்வரும் 25- 26- 27ஆம் திகதிகளில் சிறப்பாக கொண்டாடுவது சம்மந்தமாக தமது ஆலோசனைகளை இவர்கள் முன்வைத்தனர்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment