க. பொ. த. (சா/த) பரீட்சை: எழுதத் தவறியோருக்கு 9ம், 10ம், 11ம் திகதிகளில் விசேட பரீட்சை

Examவெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக சில பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இலக்காகி க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்ற முடியாத மாணவர்களுக் கென விசேட பரீட்சை அடுத்த மாதம் 9ம், 10ம், 11ம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளன.

இதற்கான விண்ணப்பப் பத்திரங்களை ஏற்கும் இறுதித் திகதி நேற்றுடன் முடிவடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெப்ரவரி 9, 10, 11ம் திகதிகளில் இப் பரீட் சையை நடத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் செயலகம் தெரிவித்தது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பாடசாலை அதிபருக்கூடாகவும் வெளிவாரிப் பரீட் சார்த்திகள் நேரடியாகவும் விண்ணப்பங் களை அனுப்பி வைக்க வேண்டுமென ஏற்கனவே பரீட்சைகள் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இதற்கமைய விண்ணப்பங்கள் கிடைக் கப்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணை யாளரின் செயலகம் தெரிவித்தது.

நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த மாதம் 17, 18, 19ம் திகதிகளில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாத நிலை தோன்றியது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் மாற்று நடவடிக்கையை மேற்கொண்டு அடுத்த மாதம் விசேட பரீட்சையை இம்மாண வர்களுக்காக நடத்தவுள்ளது.

-தினகரன்

Published by

Leave a comment