கூடுதலான இளைஞர்களை கொண்டு சமூகப்பணிகளை செய்துவரும் சமூகமேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினால் புதிய காத்தான்குடி-02, பரீட் நகர், இல 36/A எனும் முகவரியை சேர்ந்த முஹம்மது கபீர் என்பவரது மகன் முஹம்மது வலீத் (வயது 9மாதங்கள்) என்ற குழந்தைக்கு, மூளையில் ஏற்பட்ட கட்டியினால் சத்திர சிகிச்சை செய்வதற்காக ரூபா 90,524/- பணத்தினை காத்தான்குடி சமூகமேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றியம் வழங்கியது.
இக் குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு மொத்தம் ரூபா 700,000 தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இக்குழந்தையின் தந்தை கூலித்தொழில் செய்துவருவதால் குறிப்பிட்ட பெருந்தொகைப் பணத்தைப் பெற்று குழந்தையின் சத்திர சிகிச்சையினை மேற்கொள்ள முடியாத தனது நிலைமையினை எடுத்துக்கூறி, எமது ஒன்றியத்தின் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இத்தொகைப் பணத்தை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அனுமதியுடன் பொதுமக்களிடம் வசூல் செய்து கிடைக்கப்பெற்ற ரூபா 90,524/- வை குறித்த குழந்தையின் சத்திர சிகிச்சைக்காக வழங்கி இருக்கின்றோம்.
இப்பணம் அண்மையில் குறித்த தந்தையிடம் சமூகமேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். ஹாரிஸ் JP. தலைமையில் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் முன்னிலையில் குறித்த தந்தையிடம் கையளிக்கப்பட்டது.
எமது வேண்டுகோளுக்கு மனமுவந்து உதவி செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எமது ஒன்றியம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், குழந்தையின் ஆராக்கியத்திற்கும் பிரார்த்திக்கின்றோம்.
அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக!
நன்றி.
இவ்வண்ணம்,
சமூகமேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம்,
காத்தான்குடி.
Leave a comment