ஆயிஷா பவுண்டேசன் அமைப்பின் வெள்ள நிவாரண உதவி – ( ஜனவரி – 2013 )

DSC02463கடந்த வாரம் தொடர்ச்சியாக பெய்த மழையினால்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள  பிரதேசவாழ் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமாகும்.

எமது மக்களின் இவ்வவல நிலையினைக் கண்ணுற்ற ஆயிஷா பவுண்டேசன் அமைப்பானது, வீடுகளை விட்டும் இடம் பெயர்ந்து, அன்றாடம் செய்துவந்த கூலித் தொழில்களை இழந்து, உண்மையிலேயே நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களை இனம் காண்பதற்காக காத்தான்குடி பிரதேச செயலகத்தை நாடியது.

பிரதேசத்தின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த பொழுதிலும், 164C, 167E ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் மிகக்கூடுதலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, எமது பிரதேச செயலாளரின் விசேட பணிப்புரையின் கீழ், வெள்ளத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 150 குடும்பங்கள் அவ்வப்பகுதி கிராம சேவகர்களால் தெரிவு செய்யப்பட்டு, அக்குடும்பங்களுக்கு, ஆயிஷா பவுண்டேசன் அமைப்பினால் அத்தியவசிய உலர் உணவுப் பொருட்கள்  வழங்கப்பட்டன.

இந்நிகழ்வானது கடந்த 12/01/2013 சனிக்கிழமை காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் 12 மணியுடன் இனிதே நிறைவுபெற்றது.

இந்நிகழ்வினை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த ஆயிஷா பவுண்டேசன் அமைப்பின் உறுப்பினர்கள், உதவி வழங்குனர்கள், காத்தான்குடி பிரதேச செயலாளர், கிராம சேவக உத்தியோகத்தர்கள், மற்றும் மில்லத் மகளிர் வித்தியாலய அதிபர் ஆகியோருக்கு ஆயிஷா பவுண்டேசன் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வண்ணம்

சீ.எம் .எம் .சமீம்

பொதுச் செயலாளர்

ஆயிஷா பவ்ண்டேசன்

காத்தான்குடி

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment