– பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்தின் கீழ் இயங்கும் காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை சிறுவர் பூங்காவை உத்தியோகபூர்வமாக மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகல் பாடசாலை அதிபர் அஜீரா கலீல்தின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித், மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் பாடசாலையின் சிறுவர் பூங்கா உத்தியோகபூர்வமாக மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் மற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் விசேட உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் எம்.எப்.எம்.ஷிப்லி பாரூக் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் மௌலவி மசூத் அல்-மனார் அரபுக் கல்லூரி பொதுச் செயலாளர் மும்தாஸ் ‘(மதனி),அபிமான் ஆசிரியர் ‘மற்றும் பாடசாலை ஆசிரிய ஆசிரியர்கள் ‘மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.





Leave a comment