தாக்குதலுக்கு இலக்கான தங்கநகை வியாபாரி வைத்திய சாலையிலிருந்து வீடு திரும்பினார்.

OLYMPUS DIGITAL CAMERAடீன் பைரூஸ்.

சென்ற (08.01.2013 செவ்வாய்க்கிழமை ) கந்தளாய்ப் பகுதியில் வைத்து   கொள்ளையா்களின்  தாக்குதலுக்கு இலக்காகி, படு காயங்களுடன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த சகோதரா் அப்துர் ரஸாக் வீடு திரும்பியுள்ளார். 

காத்தான்குடி 01,  ஊா் வீதி ஹூசைனியா மஹல்லாவினில்  வசித்து வரும் தங்க நகை வியாபாரி சகோதரா் அப்துர் ரஸாக் கொள்ளையா்களின்  தாக்குதலுக்கு இலக்காகி  பல இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளைப் பறி கொடுத்து படு காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையினில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

சம்பவ தினம்  கொழும்பிலிருந்த  கந்தளாய்க்கு வந்து இறங்கிய சகோதரா் அப்துர் ரஸாக்,  அதிகாலை சுமார் 01:30 மணியளவில் தனது ரூமுக்கு (Room) செல்ல முற்பட்ட வேளையினில்தான்  இருளில் நின்ற இருவா் அவரைத்  தாக்கி கத்தியால் வெட்டிய பின்னரே அவரிடமிருந்த   பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

உளரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும் உடல் ஆரோக்கியத்துடன் வீடு திரும்பியுள்ளார் சகோதரா் அப்துர் ரஸாக்.OLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment