– பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறிய எல்லை கிராமமான காங்கேயனோடை பிரதேசத்தில் குடி நீர் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கும் 25 வறிய குடுப்பங்களுக்கு சிறி லங்கா ஹிறா பௌன்டேசனினால் நீர் வடிகாலமைப்பு அதிகாரசபையின் நீர் விநியோகம் பெறுவதற்கான வவுச்சர்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு சனிக்கிழமை காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் வித்தியாலயத்தின் தலைவர் றிபாய் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் மௌலவி மசூத் மௌலானா, மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் எம்.எப்.எம்.சிப்லி பாருக் ஆகியோரினால் 25 முஸ்லிம் வறிய குடுப்பங்களுக்கு நீர் விநியோம் பெறுவதற்கான வவுச்சர்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கி.மா. உறுப்பினர் சிப்லி பாரூக், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் மௌலவி மசூத் மௌலானா, அல்-மனார் அரபுக் கல்லூரி பொதுச் செயலாளர் மும்தாஸ் மதனி) மற்றும் ஊர்பிரமுகர்கள்’, ஹிறா பௌன்டேசனின் பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
குறித்த சிறி லங்கா ஹிறா பௌன்டேசனின் நிறுவனமானது சமகாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமூக அபிவிருத்தி வேலை திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு, விதவைகள், அநாதைகள், வறியவர்களை இனங்கண்டு வாழ்வாதார உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரதேசம் யுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment