இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளர் காத்தான்குடி விஜயம்- றிசானா நபீக்கின் வீட்டு நிர்மாணப்பணிக்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் 10இலட்சம் ரூபா கையளிப்பு

4– பழுலுல்லாஹ் பர்ஹான்

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு  விஜயம் செய்த சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட ஆலோசகருமான சட்டத்தரணி  யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் நேற்று மட்டக்களப்பு – காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.

5அங்கு விஜயம் செய்த அவர் சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மர்ஹூமா றிசானா நபீக்கின் குடும்ப நிலையை கருத்திற்கொண்டு அவரின் வீட்டு நிர்மாணப்பணிக்காக 10இலட்சம் ரூபாவை சிறுவர் அபிவிருத்;தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் அவரின் பிராந்திய காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

7இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் எம்.எப்.எம்.ஷிப்லி பாரூக், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் மௌலவி மசூத், அல்-மனார் அரபுக் கல்லூரி பொதுச் செயலாளர் மும்தாஸ் (மதனி), காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

10

Published by

Leave a comment