– விசேட நிருபர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக ஊர்வண முதல் மிருகங்கள் வரை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் காத்தான்குடியில் குரங்குகளின் அட்டகாசங்கள் தாங்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். கடுமையாக பெய்துவரும் மழைகாரணமாக வீட்டின் கூரைகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில் இவ்வாறான குரங்குக் கூட்டங்களின் அட்டகாசங்களால் ஏற்னனவே பாதிக்கப்பட்டிருக்கும் வீடுகளின் கூரைகள் மென் மேலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் ஆத்திரத்துடன் கூறிவருகின்றனர்.
மரக்கிளைகளை உடைத்தும் பழங்களைப் பறித்தும் சாகசங்கள் காட்டிவருவது மாத்திரமன்றி, வீடுகளிலிருக்கும் தொலைக்காட்சி ‘ஏரியல்’ களையும் முறித்தும் அதன் மேல் உட்கார்ந்தும் பொதுமக்களுக்கு தொல்லைகளைக் கொடுத்துவருவதையும் காணமுடிகிறது.

Leave a comment