சவூதி இளவரசியின் இணைப்புச் செயலர் மட்டு விஜயம்

1_12_2013 2_48 PM_0001

– பழுளுல்லாஹ் பர்ஹான்

சவூதி அரேபிய இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் ஆலோசகருமான யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து வெள்ள அனர்த்த்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பாதிப்பு நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.

1_12_2013 1_42 PM_0001சிறுவா் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கௌரவ அல்ஹாஜ்.MLAM.ஹிஸ்புல்லாஹ் MA/MP அவா்களின் அழைப்பின் பேரில் வருகை தந்த சவூதி அரேபிய இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் ஆலோசகருமான யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார். மேற்படி நிகழ்வினில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டும் கலந்து கொண்டார்.

1_12_2013 2_26 PM_0001காவத்தமுனை செம்மனோடை தியாவட்டவான் வாழைச்சேனை பகுதிகளுக்கு விஜயம் செய்த சவூதி இலவரசியின் இணைப்புச் செயலர் அப்பகுதி மக்களுடன் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் இப்பகுதியின் தேவையை நிறைவு செய்ய சவூதி மன்னரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதன் போது குறித்த விஜயத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர் மசூத் மெலவியும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1_12_2013 2_43 PM_0001

Published by

Leave a comment