காத்தான்குடி காழி நீதி மன்றம் 16.01.2013 மீண்டும் திறக்கப்படும்.

nnடீன் பைரூஸ்.

கால வரையின்றி மூடப்பட்டிருந்த காத்தான்குடி காழி நீதி மன்றம் மீண்டும் எதிர் வரும் 16.01.2013 புதன்கிழமை திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

காத்தான்குடி காழி நீதி மன்றத்தின் முன்னால் காழிநீதிபதி அல்ஹாஜ்.AM ஹிழுா்  JP அவா்களுடைய திடீர் இராஜினாமாவை அடுத்து மேற்படி காழி நீதி மன்றம் மூடப்பட்டிருந்தது.

திருமண வழக்குகள் பல முடங்கிக் கிடக்கின்ற  நிலையினில் பொது மக்களின் நலன்கருதி ஏறாவூர் காழிநீதி மன்ற நீதிபதி மௌலவி அல்ஹாஜ். MC அப்துல் மஜீட் JP (கபூரி) அவா்கள் தற்காலிகமாக  நியமிக்கப்பட்டள்ளார். இதற்கான ஏற்பாடுகளை சிறுவா் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் கெளரவ அல்ஹாஜ். MLAM. ஹிஸ்புல்லாஹ் MA/MP அவா்கள் மேற் கொண்டிருந்தார்.OLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment