ரிஸானாவின் மரண தண்டனையை ஏற்றுக் கொள்ளும் மூதூர் மக்கள்

ரிஸானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை ஒருபோதும் கண்டிப்பதில்லை என ரிஸானாவின் சொந்த ஊரில் முடிவு எடுக்கப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகரான முகமட் ராஜிஸ் தெரிவித்துள்ளார்.

மூதூரைச் சேர்ந்த முகமட் ராஜிஸ் பீபீசிக்கு வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலக முஸ்லீம்கள் ஷரீஆ சட்டத்தையே பின்பற்றி வருகின்றோம். இந்த சட்டம் முஸ்லீம்களும் ஏனைய மதத்தவர்களும் வாழும் நாடுகளில் கடைப்பிடிக்க முடியாவிடினும், முஸ்லீம்கள் மட்டும் வாழும் நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் இந்தச் சட்டம் தற்போதும் உள்ளது.

இந்த சட்டத்தின் படி, இஸ்லாமிய சட்டத்தின் படி கொலை செய்யப்பட்டவருக்கு மரண தண்டனை என்பது உறுதி. ரிஸானா கொலை செய்தாரா ? இல்லையா ? என்பதில் உறுதியான முடிவு ஏதும் இல்லை.

எங்கள் ஊரைப் பொறுத்தவரையில் உயிரிழந்த குழந்தை ரிஸானா பால் பருகும் வேளையில் குழந்தையில் கழுத்தில் சிக்கி உயிரிழந்ததாக கருதப்படுகிறது. ஆனால் ரிஸானாவும் ஒரு குழந்தை என்பதை பார்க்க வேண்டும். இங்கே அந்த கைக்குழந்தை உயிரிழந்தது உறுதி.

உயிரழந்த குழந்தையின் தாய் ரிஸானா கொலை செய்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறார். அதன்படி அவருக்கான தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது.

ஆகவே இந்த தண்டனை ஷரீஆ சட்டத்தின் படி நிறைவேற்றப்பட்டது என்பதில் எமது ஊரைப் பொறுத்தவரையில் எந்தவித எதிர்ப்புகளும் இல்லை.

ஆனால் அந்தப் பிள்ளை வறுமைக் கோட்டின் கீழ் இருப்பதால், குடும்ப சூழ்நிலை காரணமாக அவருக்கு மன்னிப்பு கொடுக்க வேண்டும் என எமது ஊர் எப்போதும் பிரார்த்தித்தது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொலையானவரின் நெருங்கிய உறவுகள், தண்டனை விதிக்கப்பட்டவரை மன்னிப்பார்களாயின் குற்றவாளி தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவார் ஷரீஆ சட்டத்தின் நிபந்தனையாகும்.

-tamilwin

Published by

Leave a comment