மர்ஹூமா ரிசானா நபீக்குக்காக ஜனாஸாத் தொழுகையும் விசேட துஆப்பிரார்த்தனையும்

– பழுளுல்லாஹ் பர்ஹான்

Rizana-Nafeek[1]கடந்த 2013-01-09ம் திகதி சவூதியில் மரண தண்டனை வழங்கப்பட்ட மூதூரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் மர்ஹூமா ரிசானா நபீக்குக்காக இலங்கையில் நாலாபக்கங்களிலுமுள்ள ஜூம்மாப் பள்ளிவாயல்களில் ஜனாஸாத் தொழுகையும் விசேட துஆப்பிரார்த்தனையும் இன்று வெள்ளிக்கிழமை  2013-01-11 ஜூம்மாத் தொழுகையின் பின் இடம்பெற்றது.

இதற்கமைவாக காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்மாப் பள்ளிவாயலிலும் ஜனாஸாத் தொழுகையும் விசேட துஆப்பிரார்த்தனையும் இடம்பெற்றது. ஜனாஸாத் தொழுகையும் விசேட துஆப்பிரார்த்தனையையும் முகைதீன் மெத்தை பெரிய ஜூம்மாப் பள்ளிவாயல் பிரதம பேஸ்இமாம் மௌலவி அமீன் பலாஹி நடாத்தியதோடு விசேட சொற்பொழிவொன்றையும் நிகழ்த்தினார்.

இதில் மட்டக்களப்பு காத்தான்குடி ஜம்மியதுல் உலமா தலைவர் அலியார் பலாஹி சம்மேளன செயலாளர் அப்துல் காதர் பலாஹி உலமாக்கள் புத்திஜீவிகள் ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் ஆயிறக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டதுடன் றிசானாவின் மரணத்துக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளிக்காட்டினர்.

றிசானாவுக்கு ஏற்பட்ட இந்நிலை அவரது குடும்பத்தை மட்டுமல்லாது இலங்கை அரசையும் மற்றும் சகல முஸ்லிம்களையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment