மரணித்த றிஸானா நபீக்கின்குடும்பத்தினர் வசிப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட வீடொன்றை அமைத்துக்கொடுப்பதற்கு முன்வந்துள்ள சவுதி தனவந்தர்

பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு/ FM. பர்ஹான்

சவூதியில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள றிஸானா நபீக்கின் குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்திற்கொண்டு அவர் எந்த நோக்கத்திற்காக சவூதிக்குச் சென்றாரோ அது நிறைவேற்றப்படவேண்டும் என்பது தொடர்பில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர்  ஒருவர் முன்வந்திருப்பதாக பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

நான்கு மாத காலத்திற்குள்  றிஸானா நபீக்கின்குடும்பத்தினர் வசிப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட வீடொன்றை அமைத்துக்கொடுப்பதற்கு அவர் முன் வந்துள்ளதாக பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்ததாக அமைச்சரின் ஊடக செயலாளர் எம்.எஸ்.எம். சஜி தெரிவித்தார்.

Published by

Leave a comment