எப்.எம். பர்ஹான்
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பாவனைக்காக ஆசிய மன்றத்தின் நிதியுதவியில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் அனுசரணையில் கணணி ஒன்று இன்று (09.01.2013) காலை பதிவாளர் நாயகம் எம்.ஏ.ஜமால் முஹம்மதிடம் கையளிக்கப்பட்டது.
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ஆசிய மன்றம் செயற்படுத்தி வரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் உள்ளூராட்சி மன்றங்களின் முத்திரை வரி தொடர்பான விடயங்களை பேணுவதற்கும், அச்சேவையினை விரைபடுத்துவதற்குமாக குறித்த கணணி வழங்கப்பட்டது.
கல்முனை மாநகர சபையானது கடந்த இரண்டு வருடங்களில் 33 மில்லியன் ரூபாவினை முத்திரை வரி வருமானமாக பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது மாநகர சபை கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a comment