மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவந்த அடைமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி வெள்ள நிவாரணப்பொருட்கள் செவ்வாய்க்கிழமை இரவு காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் காரியாலயத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
இதன் போது காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் பாதிப்படைந்த மக்களுக்கு வழங்குவதற்கென சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி வெள்ள நிவாரணப்பொருட்கள் மக்கள் பிரதிநிதிகள் சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எப்.எம்.சிப்லி பாரூக், பொது அமைப்புக்கள் சார்பாக செரண்டிப் நிறுவனத்தின் கிழக்கு மாகாண முகவரும் எம்.ஐ.எம். ஸ்டோரின் உரிமையாளருமான எம்.ஐ.எம். மக்பூல் ஹாஜி ஆகியோரினால் காத்தான்குடி சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அஹமட் லெப்வை மற்றும் அதன் பிரதித்தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத் அதன் செயலாளர் மௌலவி அப்துல் காதர் (பலாஹி) ஆகியோர்களிடம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எப்.எம்.சிப்லி பாரூக் மற்றும் செரண்டிப் நிறுவனத்தின் கிழக்கு மாகாண முகவரும் எம்.ஐ.எம். ஸ்டோரின் உரிமையாளருமான எம்.ஐ.எம். மக்பூல் ஹாஜி மற்றும் சம்மேளன உதவி செயலாளர் ஏ.எம்.ஸாதிகீன் சம்மேளன உறுப்பினர்களான எம்.எச்.ஏ. பஸீர், பாரூக் ஹாஜி, பஹ்மி ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
இங்கு குறிப்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எப்.எம்.சிப்லி பாரூக்கினால் சேரிக்கப்பட்ட ஒரு தொகுதி நிவாரண உதவிகள் மற்றும் செரண்டிப் நிறுவனத்தினால் 1000 கிலோ மாவும் டயமன்ட்ஸ் புட்ஸ் பிறைவட் லிமிடட்டால் ஒரு தொகை பண உதவி மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியவற்றினால் சேகரிக்கப்பட்ட உதவிகளும் இங்கு கையளிக்கப்பட்டது.

Leave a comment