அரச ஊழியர்களின் அசமந்தப் போக்கினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் கிடைப்பதில் குழறுபடிகள்!

– எப்.எம். பர்ஹான்

அரச ஊழியர்களின் அசமந்தப் போக்கினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் கிடைப்பதில் பல குழறுபடிகள் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் குற்றச்சாட்டியுள்ளார்.

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் உரிய முறையில் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லையென்பதை நாட்டின் ஐனாதிபதி மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சின் கவனத்திறக்கும் கொண்டுசெல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் இது சம்பந்தமாக ஊடகங்களுக்கு விடுத்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

மன்னார் எருகலம் பிட்டி கிராமம் மழை வெள்ளம்,  நுளம்பு,  டெங்கு, வறுமை என பல துன்பங்களை இப் பிரதேசத்தைச் சோந்த 800 குடும்பங்கள் சகிப்புடன் ஏற்று  கண்ணீருடன் வாழ்கின்றனர் . தொடர் மழையால் இப் பிரதேசம் மிகவும் மோசமாகக் பதிக்கப்பட்டு மக்கள் எவ் விதமான உதவிகளோ, நிவாரணமோ கிடைக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

இதுவரை  மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  உதாசீனம் செய்யப்பட்ட இம் மக்களை  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வன்னி இணைப்பாளர் கீதாஞ்சலி இன்று 09.01.2013  மாலையில் சென்று பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறினார் .

ஜனாதிபதி எந்த இன  மத  மொழி வேறு பாடு கட்டாத தலைவர்  அடை மழை வெள்ளத்தால் பதிக்கப்பட்ட அனைவர்க்கும்  பார பட்சமற்ற நிவாரணம் வழங்கும்படி  பெரும் தொகையான நிதி  அனர்த்த நிவாரண அமைச்சிக்கு வழக்கப்பட்டும்,  கடந்த வாரத்தில் அமைச்சர் மகிந்த அமரவீர நேரடியாகவே மன்னார் விஜயம் செய்து சில இடங்களை பார்வையிட்டும்,   கொடுக்கப்பட்ட நிவாரணம் இவ் வகையான பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையாதது வேதனையான விடயமே.  அரச அதிகாரிகள் தம் கடமைகளை சரியாக செய்யாததால் மக்கள் பாதிக்கப்பட்டுளள்துடன்  மக்கள் அரசை குறை கூறும் நிலை ஏற்படுகின்றது.

கடவுள் வரம் கொடுத்ததும்  பூசாரி வரம் கொடாதது போல ஜனாதிபதி கொடுக்கும் நன்மைகள் மக்களை அடைவதில்லை என மக்கள் கண்ணீருடன் கூறினார்கள் .

எனவே  தயவு செய்து பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அறிந்து   அரச சேவகர்கள்  தமது கடமைகளை  உடன் மக்கள் நன்மை கருதி செயல் படல் வேண்டும் எனவும்  இவ் விடயத்தை தாம் அனர்த்த நிவாரண அமைசிக்கும்  ஜனாதிபதி கவனத்திகும் எடுத்து செல்வதாகவும் கீதாஞ்சலி கூறினார்.

Published by

Leave a comment