-MJ
1988ம் வருடம் பிறந்த றிசானாவுக்கு கடவுச்சீட்டில் 03/05/1982 (PP. No. NO331835) என்ற போலியான பிறப்பு திகதியிட்டு ஓரிரு ஆயிரம் ரூபாய்களுக்கான நப்பாசையில் றிசானாவின் வெளிநாட்டு முகவரின் இந்த தப்பான ஓர் ஏற்பாட்டில் வறுமைக் கோட்டுக்கும் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் குடும்பத்தின் கனவு இன்று பாலைவனத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கின்றது.
தான் கொலை செய்ய வில்லை என்று றிசானா சாட்சியமளித்திருத்தும் அரபி என்ற அசட்டுக் கௌரவ சட்டத்திட்டங்களுக்காக றிசானாவின் உயிர் இன்று நீதியாளன் இறைவனிடம் சென்றிருக்கின்றது. இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றினாலும் சவூதியில் அரபிகளுக்கு தனித்துவமான சட்ட திட்டங்கள் இருந்து வருவது கவனிக்கத்தக்கது.
றிசானா இக்கொலையை செய்யவில்லை என்பது ஊர்ஜிதமாகி இருந்ததால் சவுதி, இலங்கை மற்றும் மேலத்தேய மனித உரிமை அமைப்புக்களும், சிரேஷ்ட அதிகாரிகளும் றிசானாவுக்கு பொது மன்னிப்பை அளித்து விடுதலை செய்யுமாறு குறித்த பெற்றோரைக் கேட்டிருந்தனர். 18 வயதை அடைவதற்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவம் மனித உரிமைக்கு அப்பாற்பட்டது எனவும் இதனால் பொது மன்னிப்பளிப்பதால் ஓர் அப்பாவியான இச்சிறுமியை உயிராபத்திலிருந்து காப்பாற்றி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அவர்களின் பெற்றோர்களிடம் திருப்பி அனுப்ப முடியும் எனவும் கோரப்பட்டிருந்தன. எனினும் அரபி, அஜ்னபி என்ற ஓர் பாகுபாட்டில் ஓர் உயிர் இன்று பறிக்கப்பட்டிருக்கின்றது.
சவுதியில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நஃபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக இலங்கை வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தான் பணியாற்றிய சவுதி அரேபிய வீட்டில் ஒரு குழந்தையைக் கொன்றதாக 2005 ஆம் ஆண்டில் ரிசானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த 4 மாதக் குழந்தையை தான் கொன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை ரிசானா மறுத்திருந்தார்.
றிசானாவின் விடுதலைக்காக வைத்தகண் வாங்காமல் காத்திருந்த நாட்கள்..
அந்த கொலை நடந்ததாகக் கூறப்பட்ட தருணத்தில் ரிசானாவுக்கு 17 வயது மாத்திரமே என்றும் அவர் சட்டபூர்வ வயதை எட்டாதவர் என்றும் அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் கூறியிருந்தனர்.
இந்தக் கூற்று உண்மையாகும் பட்சத்தில், ஒரு சிறுமிக்கு மரணதண்டனை விதித்ததற்காக சவுதி அரேபிய மீது குழந்தைகள் உரிமைகள் குறித்த சர்வதேச சட்டங்களின்படி குற்றஞ்சாட்டப்பட முடியும்.
ரிசானாவுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக இலங்கை நாடாளுமன்றம் ஒரு நிமிடம் மௌனம் காத்தது.
சவுதி அரேபியா என்றும் அமெரிக்கர்களையோ அல்லது ஐரோப்பியர்களையோ கொல்வதில்லை என்றும் அது ஆசியர்களையும், ஆப்பிரிக்கர்களையுந்தான் கொலை செய்வதாகவும் கூறியுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் நலனுக்காகக் குரல்கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்க, அந்த அரசாங்கம் ஒரு சர்வாதிகார அரசாங்கம் என்று கூறியுள்ளார்.
![Rizana-Nafeek[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/01/rizana-nafeek1.jpg?w=111&h=150)
![_50022317_parents[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/01/50022317_parents1.jpg?w=466&h=260)
![AHRC-STM-011-2013[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/01/ahrc-stm-011-20131.jpg?w=190&h=215)
Leave a comment