– பழுளுல்லாஹ் பர்ஹான்
மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சினால் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய உள்ளுராட்சி மன்றங்கள் விழா நேற்று செவ்வாய்க்கிழமை அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இலங்கையில் உள்ள 335உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் பிரதேச, நகர, மாநகர முதல்வர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் சிறப்பாக சேவையாற்றிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு ”சுவர்ண புறவற”விருது வழங்கி வைக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாணத்திலேயே முதற்தடவையாக தேசி ரீதியில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ள காத்தான்குடி நகரசபைக்கு ”சுவர்ண புறவற”விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரினால் காத்தான்குடி நகரசபைத்தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பருக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட், கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, ஊவாமாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஸ, மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
”சுவர்ண புறவற”விருது கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி நகர சபைக்கு மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.











Leave a comment