கல்முனை மாநகர முதல்வரினால் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வியாபார நிலையங்கள் முற்றுகை: உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

– பழுளுல்லாஹ் பர்ஹான்

DSCN7494கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களில் காணப்பட்ட சமைப்பதற்கு  உதவாத உணவுப் பொருட்கள் மற்றும் காலாவதியான தீன்பண்டங்கள், பழரச போத்தல்கள் என்பன இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது கைப்பற்றப்பட்டன.

உணவு கையாளும் நிலையங்கள் தொடர்பாக கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்பிற்கு பொது மக்களால்  பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (09.01.2013) காலை முதல்வர் தலைமையிலான குழுவினர் உணவு கையாளும் நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையினை மேற்கொண்டபோதே மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இப்பரிசோதனையின்போது 2012, 2013ம் ஆண்டுக்கான வியாபார அனுமதிப்பத்திரம், கழிவு நீர் வடிகானினுள் செலுத்தப்படுதல், உணவுப் பண்டங்கள் திறந்த நிலையில் ஈக்கள் மொய்க்கும் வண்ணம் வைக்கப்பட்டிருத்தல், சமையல் அறையின் சுகாதாரம், குளிர்சாதனப் பெட்டியின் முழுமையான முகாமைத்துவம்,  சமைக்கும் பாத்திரங்களின் தூய்மை, மனித நுகர்விற்கு பொருத்தமில்லாத உணவுகள் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருத்தல், சவர்க்காரமிட்டு கைகழுவும் வசதி வைத்திருத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதன்போது மேற்படி விடயங்கள் தொடர்பில் கவனக் குறைவாக செயற்பட்ட உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டது.

இத்திடீர் முற்றுகையின்போது மாநகர முதல்வருடன் சுகாதார பிரிவு பொறுப்பதிகாரி, உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாநகர சபையின் வருமான வரி பரிசோதகர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment