– பழுளுல்லாஹ் பர்ஹான்
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக கல்முனை அல்-சுஹறா வித்தியாலயம் ஒரு அடி வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பாடசாலை மாணவ மாணவிகளின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டிருந்தது. கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (08.01.2013) நேரில் சென்று பார்வையிட்டு வெள்ள நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டார்.
குறித்த பாடசாலை வீதியினை விடவும் தாழ்ந்து காணப்படுவதானால் நீர் இறைப்பு இயந்திரம் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது.
மேற்படி பாடசாலையின் உள்ளக தாழ் நிலங்களை மண் இட்டு உயர்த்தி தருமாறு அதிபர், ஆசிரியர்கள் முதல்வரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அத்தேவையை பூர்த்தி செய்து தருவதாக முதல்வர் உறுதிமொழி வழங்கினார்.
படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.







Leave a comment