– இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய விளக்கம்-
மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகளின் போது ஒரு சிறியளவிலான பயிற்சிகளை மட்டுமே மாணவர்களுக்கு வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்- இலங்கை ஆசிரியர் ஒன்றியம்- இலங்கை ஆசிரியர் சேவைகள் ஒன்றியம் ஆகியன பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவ முகாம்களில் பயிற்சி வழங்கப்பட்டாலும் பல்கலைகக் பேராசிரிர்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுமே பயிற்சிகளை நிர்வாகம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உயர்கல்வி அமைச்சின் கொள்கைகளுக்கு அமைவான முறையில் பயிற்சிகள் நடாத்தப்படுகின்றன.
இலங்கையில் ஒரே தடவையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு தங்மிட வசதிகளை வழங்கக்கூடிய ஒரே இடமாக இராணுவ முகாம்கள் காணப்படுவதனால் தலைமைத்துவ பயிற்சிகளை முகாம்களில் நடாத்துவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment