புதிய மாணவா்கள் அனுமதியும் சீருடை வழங்கும் நிகழ்வும்

OLYMPUS DIGITAL CAMERAடீன் பைரூஸ்.

புதிய காத்தான்குடி மட்/அன்வா் வித்தியாலயத்தில் தரம் ஒன்று (GRADE 01) க்கான புதிய மாணவா்கள் அனுமதியும், மாணவா்களுக்கான இலவச சீருடை வழங்கும் நிகழ்வும் சென்ற  (07.01.2013 திங்கற்கிழமை) காலை 08.30 மணிக்கு பாடசாலை மண்டபத்தில்  நடை பெற்றது.

புதிய காத்தான்குடி மட்/அன்வா் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினா்கள் மற்றும் பாடசாலையின்  ஆசிரியா்களுடைய முழுமையான பங்கு பற்றுதலுடன்  இடம் பெற்ற இந்நிகழ்வின் போது,  தரம் ஒன்றுக்கு சுமார் 170 க்கும் மேற்பட்ட மாணவா்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் மாணவா்களுக்கான இலவச சீருடையும்  வழங்கிவைக்கப்பட்டது.

சுனாமியின் போது மிகவும்  கூடுதலாகப் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் பலவற்றில்  புதிய காத்தான்குடி மட்/அன்வா் வித்தியாலயமும் ஒன்றாகும். சுனாமியின் பின்னா் ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன்  மிகவும் அழகாக கட்டி முடிக்கப் பட்டிருப்பதனைக் காணக் கூடியதாக உள்ளது.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பாடசாலை மைதானம் மழை நீரால் நிரம்பி உள்ளது.OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment