காத்தான்குடி 01, ஊா் வீதியில் வசித்து வரும் தங்க நகை வியாபாரி சகோதரா் அப்துர் ரஸாக் என்பவா் (08.01.2013 செவ்வாய்க்கிழமை ) இன்று அதிகாலை கொள்ளையா்களின் தாக்குதலுக்கு இலக்காகி படு காயங்களுடன் ஆபத்தான நிலமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சகோதரா் அப்துர் ரஸாக் பழைய நகைகள் வாங்குவது விற்பது மாத்திரமின்றி நகைகளை மொத்தமாக கடைகளுக்கு கொடுப்பது என பல வருட கால அனுபவத்துடன் வியாபாரம் செய்து வருபவா்.
இவா் அடிக்கடி வியாபார நோக்குடன் கொழும்புக்குச் சென்று வருவது வழக்கம். இவ்வாறுதான் இவா் நேற்று கொழும்பில் தனது வேளைகளை முடித்து விட்டு கந்தளாய்க்கு இன்று அதிகாலை வந்து இறங்கும் போதுதான் வெள்ளை வேனில் வந்த இனம் தெரியாத குழு ஒன்று இவரை தாக்கி, கத்தியால் குத்தி விட்டு இவரிடமிருந்து பணம், நகை என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்டதில் பணம் இருபது இலட்சம் என்றும், 600g தங்கம் என்றும் கூறப்படுகின்றது. மேற்படி சம்பவம் கந்தளாய் பஸார் பள்ளிவாயலுக்கு அன்மையில் இருக்கும் CITY HARDWARE க்கு முன்பாக இடம் பெற்றுள்ளது.
கொள்ளையா்கள் தப்பிச் சென்றுள்ள போதும் CITY HARDWARE கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் சில காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது .
மேற்படி சம்பவம் தொடா்பாக பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Leave a comment